தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கடக ராசிக்காரர்களுக்கு முயற்சி எல்லாம் வெற்றி..! உங்கள் ராசிக்கு எப்படி..? - Horoscope for 12 Zodiac Signs

Today Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களைப் பார்க்கலாம்.

Tamil Horoscope for 4th December
ராசிபலன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2023, 6:13 AM IST

மேஷம்: இன்று நீங்கள் உங்கள் குழந்தைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். நெடுநாட்களாக முடிக்காமலிருந்த பணிகளை, நிறைவு செய்வீர்கள். மருத்துவத்துறை மற்றும் பொதுத் துறையில் இருப்பவர்களுக்கு இன்று சிறந்த நாளாக இருக்கும்.

ரிஷபம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, ஒரு ஆக்கப்பூர்வமான போட்டி நிறைந்த நாளாக இருக்கும். உங்களது செயல் திறன் மூலமாக உங்களுடன் பணிபுரிபவர்களையும், மேல் அதிகாரிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள்.

மிதுனம்: நீங்கள் உங்கள் மூளை சொல்வதை விட, மனம் சொல்வதைத் தான் அதிகம் கேட்பீர்கள். பல்வேறு உணர்வுகளால் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். இதனால் நீங்கள் நல்லவை மற்றும் கெட்டவை இடையிலான வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கும். எனினும், மாலை நேரத்தில் நிலைமை மேம்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

கடகம்: இன்றைய தினத்தை, பிரகாசமான வருங்காலத்திற்கான, ஒரு நிச்சயமான திட்டத்துடன் தொடங்குவீர்கள். உத்திகளைத் திறமையாகச் சிந்தித்து அமல்படுத்துவீர்கள். முறையாக எடுக்கப் பட்ட முடிவுகளின் மூலம், நேரத்தைச் சேமிப்பீர்கள். உங்கள் முயற்சி அனைத்தும் வெற்றி பெறும்.

சிம்மம்: புதிய திட்டங்களை எடுத்துக்கொண்டு திறமையாகச் செயல்படுவீர்கள். அனைத்து செயல்களையும் வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். தனிப்பட்ட உறவுகளில் பாதிப்புகள் ஏற்பட்டாலும், அது தொடர்பான பிரச்சனைகளை, நீங்கள் வெற்றிகரமாகத் தீர்த்து விடுவீர்கள்.

கன்னி: குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை என்று புரிந்து கொள்வீர்கள். பரிவர்த்தனைகளைக் கையாளும்போது, உங்கள் பேச்சுத் திறன் காரணமாக, அனைத்து சச்சரவுகளையும் சுமுகமாக முடித்து வைப்பீர்கள். நடுநிலையுடன் இருப்பதன் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்து கொண்டு இருப்பீர்கள்.

துலாம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, உணவின் மீது உங்களது ஆர்வம் அதிகம் இருக்கும். உங்கள் ஆசைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், இன்று நீங்கள் பலவிதமான உணவுகளைச் சுவைத்து மகிழ்வீர்கள். தொழில் துறையைப் பொறுத்தவரை, எந்த திசையில் போவது என்று சிறிது குழப்பலை நிலவலாம். எனினும், பலவிதமான வழிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான, வாய்ப்புகள் அதிகம் இருக்கும்.

விருச்சிகம்: நீங்கள் சிறு சச்சரவுகளிலும், வம்பு பேச்சுகளைப் போக்கி, அன்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துவீர்கள். நான் என்ன கொடுக்கிறோமோ அது தான் கிடைக்கும். அதனால் மகிழ்ச்சியைப் பரப்பினால், நமக்கு மகிழ்ச்சியைக் கிடைக்கும் என்ற கோட்பாட்டின் படி நடப்பீர்கள்.

தனுசு: பணியில் நீங்கள் உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் வேலை செய்வீர்கள். இதனால் உங்கள் வேலை பளு அதிகரிக்கக்கூடும். உங்களுக்கு வேலை செய்வதிலும் ஆர்வம் அதிகம் இருக்கும். நாளின் பிற்பகுதியில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குதுகலத்துடன் மாலையை அனுபவிக்கவும்.

மகரம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, உங்களுக்கு வரும் வாய்ப்பு எதையும் நீங்கள் தவறவிடாமல் கவனமாகச் செயல்படுவீர்கள். சட்டம் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பீர்கள். நீங்கள் தரகர் அல்லது ஒப்பந்தக்காரர் என்றால், நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. இது பெரிய அளவிலான நஷ்டமாகவும் இருக்கலாம்.

கும்பம்: நீங்கள் உங்கள் குடும்பத்தினரை மிகவும் விரும்புபவர் என்பதால், அவர்களுடன் வெளியில் சென்று நேரம் செலவிட இன்று சரியான நாளாகும். அவர்களுடன் அருகில் உள்ள கடைகளுக்குச் சென்றோ அல்லது சிறிய சுற்றுலா சென்றோ, அவர்களுக்கு வேண்டியதை வாங்கிக்கொடுத்துச் சந்தோஷப்படுத்துவீர்கள்.

மீனம்: இன்று நீங்கள் மக்களிடம் அனுதாப மனப்பான்மையுடன் நடந்து கொள்வீர்கள். இதனால் சிலரின் ஆசிகளைப் பெறுவீர்கள். நீங்கள் நல்ல மேலதிகாரியாக, நல்ல சக பணியாளராக, கணவனாக அல்லது மனைவியாக மற்றும் நல்ல மகன் அல்லது மகளாக உங்களை நிரூபிப்பீர்கள். இந்த நல்ல தன்மையை நீங்கள் கை விடாமல் இருக்க வேண்டும்.

இதையும் படிங்க: டிசம்பர் மாத முதல் வாரத்தில் பயணம் செல்லும் ராசிகள் யார்?..

ABOUT THE AUTHOR

...view details