தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை! - சுகாதாரத்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா

டெல்லி: கரோனா தடுப்பூசி குறித்து சந்தேகத்திற்கு இடமான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தடுப்பூசி
தடுப்பூசி

By

Published : Jan 7, 2021, 6:22 AM IST

கரோனா தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு சுகாதாரத்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா உத்தரவிட்டுள்ளார்.

மாநில, யூனியன் பிரதேச அரசுகளின் தலைமைச் செயலாளர்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்திய அவர், தடுப்பூசி போடும் பணியை எந்தவித சிக்கலும் இல்லாமல் சுமூகமாக நடத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

கரோனா தடுப்பூசி போடும் பணிகளின் நாடு தழுவிய நிலவரம் குறித்து அவர் கேட்டுக் கொண்டார். கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளுக்கு அவசர கால அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தடுப்பூசி போடும் பணி ஜனவரி 13ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொய்யான தடுப்பூசிகளை கொண்டு மக்களை ஏமாற்ற சமூகவிரோதிகள் முயற்சித்துவருவதாக மாநில அரசின் உயர் மட்ட அலுவலர்கள் ஆலோசனை கூட்டத்தின்போது தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், Cyber Dost என்ற ட்விட்டர் பக்கம் மூலம் தடுப்பூசி குறித்த பொய்யான தகவல்களுக்கு எதிரான உண்மைச் செய்திகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details