தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவது குறித்து கடந்த வாரம் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தில் மார்ச் 27ஆம் தேதி முதல் 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படவுள்ளதால், அரசியல் கட்சியினரின் பரப்புரைகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் ஹவுரா மாவட்டத்தில் இயங்கும் பிரபல மிட்டாய் தயாரிப்பு கடையான மா காந்தேஸ்வரி ஸ்வீட்ஸ், அரசியல் கட்சி சின்னங்கள் பொறித்த இனிப்புகளை, மக்களுக்கு விநியோகித்து வருகிறது. கட்சிகளுக்கு ஏற்றப் இனிப்புகளின் நிறங்களையும் வடிவமைத்துள்ளனர். காவி கலர் ஸ்வீட்டில், பாஜகவின் தாமரை சின்னமும், பச்சை நிற ஸ்வீட்டில், திரிணாமுல் காங்கிரஸின் மூன்று இலை சின்னமும் இடம்பெற்றுள்ளன.