டெல்லி: நாடாளுமன்றத்தில் குளிர் கால கூட்டத் தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 29ஆம் தேதி வரை குளிர் கால கூட்டத் தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 17 அமர்வுகள் நடைபெற உள்ளன.
இந்நிலையில், நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரின் பூஜ்ய நேர கேள்வி நேரத்தில் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் சுஷில் குமார் மோடி, நாட்டில் படிப்படியாக 2ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்க கோரிக்கை வைத்தார்.
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாமல் செய்து அடுத்த 2 ஆண்டுகளில் வங்கிகளில் பொது மக்கள் டெபாசிட் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என சுஷில் குமார் மோடி கூறினார்.
மேலும் அவர், நாட்டில் பெரும்பாலான ஏ.டி.எம்.களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வைக்கப்படுவதில்லை என்றும், கடந்த 3 ஆண்டுகளில் ஒரு நோட்டுகளைக் கூட ரிசர்வ் வங்கி அச்சடிக்காததால், மத்திய அரசு தலையீட்டு விளக்கமளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.