டெல்லி: கடந்த 2016ஆம் ஆண்டு நவ.8இல், புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதனால் பல நெருக்கடிகளை மக்கள் சந்தித்தனர். இதனையடுத்து பணமதிப்பிழப்புக்கு எதிராக 58 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
Supreme Court: பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு - Modi
500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்குகள் தொடர்பான தீர்ப்பு இன்று (ஜன.2) அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் வாசிக்கப்பட்டது. அதில், '2016-ஆம் ஆண்டு நவ.8 அன்று அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ரத்து செய்ய முடியாது. ரிசர்வ் வங்கியிடம் ஆலோசனை மேற்கொண்ட பிறகே, மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது. எனவே மத்திய அரசின் நடவடிக்கையில் தவறில்லை. ஆகவே இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது’ என உத்தரவிடப்பட்டது.
இதையும் படிங்க:பாலியல் வழக்கில் சிக்கிய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜினாமா