டெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுவந்தது. இந்த இடஒதுக்கீட்டை மே மாதம் 5ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
அப்போது இந்த இடஒதுக்கீடு அரசியல் சாசனத்துக்கு எதிராக உள்ளது. இந்திரா சகானி வழக்கில் கொடுக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் 50 சதவீத இடஒதுக்கீடு உச்ச வரம்பு அமல்படுத்தப்பட்டது.
ஆகவே மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவீதம் இடஒதுக்கீடு என்பதை நியாயப்படுத்த முடியாது. அந்தவகையில், மராத்தா சமூகத்தினருக்கு வேலை வாய்ப்பில் 12 சதவீதத்துக்கு மிகாமலும், கல்வியில் 13 சதவீதத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுபரிசீலனை மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்த முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மராத்தா சமூகத்தினரின் இடஒதுக்கீட்டை உறுதிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : மராத்தா சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு ரத்து: திமுக அரசு மேல்முறையீடு செய்ய வைகோ வலியுறுத்தல்