நொய்டா:உத்தரப் பிரதேம் மாநிலம் நொய்டாவில் சட்ட விரோதமாக கட்டப்பட்ட இரட்டை கோபுர கட்டடங்கள் இன்று (ஆகஸ்ட் 28) பிற்பகல் 2:30 மணிக்கு தகர்க்கப்படுகின்றன. இதில் அபெக்ஸ் என்னும் கோபுரம் 32 மாடிகளையும், செயேன் கோபும் 29 மாடிகளையும் கொண்டுள்ளது. 100 மீட்டர் உயரம் கொண்ட இந்த கட்டடங்களில் மொத்தமாக 3,700 கிலோ வெடிபொருட்கள் பொருத்தப்பட்டுள்ளன. வெறும் 9 வினாடிகளில் தகர்க்கப்பட உள்ளது.
இந்தியாவில் தகர்க்கப்படும் மிகப்பெரிய கட்டடங்கள்... 5,000 குடியிருப்புவாசிகள் வெளியேற்றம்... - நொய்டா கட்டடங்கள்
நொய்டாவில் சட்ட விரோதமாக கட்டப்பட்ட 32 அடுக்குகள் கொண்ட இரட்டை கட்டடங்கள் தகர்க்கப்பட உள்ளத்தையொட்டி குடியிருப்புவாசிகள் வெளியேற்றப்பட்டனர்.
இதன்காரணமாக கட்டடங்கள் உள்ள செக்டார் 93ஏ மற்றும் அதனை சுற்றியுள்ள 5,000 குடியிருப்பு வாசிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 3,000 வாகனங்கள் மற்றும் பூனைகள், நாய்கள் உள்ளிட்ட 200 வீட்டு விலங்குகள் வெளியேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக நொய்டா-கிரேட்டர் நொய்டா விரைவுச் சாலை பிற்பகல் 2.15 முதல் 2.45 மணி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இடிக்கும் பணி 100 மீட்டர் தொலைவில் இருந்து நடக்கும் என்றும், அப்போது தொழில்நுட்ப குழுவுடன் மாநகராட்சி அலுவலர்கள், போலீசார் உடனிருப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பிரதமருடன் 7,500 பெண்கள் ஒன்றாக ராட்டை சுற்றி சாதனை