நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு டிசம்பர் 12-ம் தேதி அவர் நடித்த பாபா திரைபடம் மறுவெளியீடு செய்ய உள்ள தகவல் வெளியானது முதல் ரசிகர்களிடையே பயங்கர எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளன்று ஒரே ஒரு காட்சியாக திரையிட திட்டமிட்ட குழுவினர், பின்னர் படத்திற்கு ஏற்பட்டிருக்கும் வரவேற்பை அடுத்து தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் பல திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
DI, மிக்ஸிங் போன்ற நவீன தொழில்நுட்ப மாற்றங்களுடன் படம் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதுதவிர, படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், படத்தின் முன்னோட்டத்தை தான் முதலில் பார்வையிடுவதற்கு கோரிக்கை வைத்துள்ளார். இதன் மூலம், தன்னால் படத்தின் இசையினை மேலும் மேம்படுத்த இயலுமா என்பதை அறிய உதவும் என தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் புதிய காட்சிகளுக்கு டப்பிங் பேசினார். நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ஆகியோர் பாபா படத்தின் மறுவெளியீட்டுக்கான வரவேற்பினை கண்டு மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:கல்யாணத்துக்கு ரெடி! கெளதம்- மஞ்சிமா க்யூட் போட்டோ கலெக்ஷன்ஸ்