தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குஜராத்தில் கரோனாவை வென்ற தன்னம்பிக்கை பெண்மணி!

குஜராத் மாநிலத்தில் புற்றுநோய், நீரழிவு நோய்க்கு மத்தியில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 58 வயதான பெண், அதிலிருந்து மீண்டு பொது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.

By

Published : Apr 25, 2021, 5:40 PM IST

ஜெயாபென்
தன்னம்பிக்கை பெண்மனி

ஆனந்த்:நாடு முழுவதும் கரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

புற்றுநோய், நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர் ஜெயாபென். குஜராத் மாநிலம், கம்பாட் பகுதியைச் சேர்ந்த 58 வயதான இந்த பெண்மணிக்கு, அண்மையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஜெயாபென்னின் ஆக்ஸிஜன் அளவு கடுமையாகக் குறைந்ததை அடுத்து, அவர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார்.

சிகிச்சையில் இருக்கும் அவருக்கு 45 முதல் 50 லிட்டர் ஆக்ஸிஜன் தேவைப்பட்டது. அதேநேரத்தில், ஏற்கனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அவரின் நிலைமையை மேலும் மோசமாக்கியது. தொடர்ந்து 24 நாள்கள் வென்டிலேட்டர் ஆதரவில் சிகிச்சைப் பெற்று வந்த அவர், தற்போது பூரண நலம் அடைந்துள்ளார்.

சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் போது, "பரிசோதனையில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அதைக் கண்டு பீதி அடைய வேண்டாம். நிலைமையை தைரியமாகவும், உறுதியாகவும் எதிர்கொள்ள வேண்டும்.

நேர்மறையான சிந்தனை எந்த விதமான வியாதியையும் குணப்படுத்தும். தொற்று நோயிலிருந்து காப்பாற்றிக் கொள்ள முகக்கவசம் அணிவதோடு, கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்" என்று ஜெயாபென் அறிவுறுத்தியுள்ளார். மேலும் அவர் மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

புற்றுநோய், நீரழிவு நோய்க்கு மத்தியில், கோவிட் 19 ஆல் பாதிக்கப்பட்ட 58 வயதான பெண், அதிலிருந்து மீண்டு பொது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details