டெல்லி:இதுதொடர்பாக குடியரசுத் தலைவருக்கு அவர் 8 பக்க கடிதத்தை எழுதியுள்ளார். அதில், ராஜிவ் காந்தி வழக்கில் சிறையில் உள்ள இந்த குற்றவாளிகள் வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே காலத்தை கழிப்பதை உறுதி செய்து, உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராஜிவ் கொலை வழக்கில் எழுவரை விடுதலை செய்யக்கூடாது: சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தல்
ராஜிவ் காந்தி வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக்கோரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பரிந்துரையை நிராகரிக்க வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
ராஜிவ் வழக்கில் உள்ள எழுவரை விடுதலை செய்யக்கூடாது: சு.சுவாமி வலியுறுத்தல்
மேலும், பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்ற ஒரு எச்சரிக்கையாக குடியரசுத் தலைவரின் முடிவு அமைய வேண்டும் எனவும் அவர் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:'பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளிக்கு அரணாக நிற்பேன்' - சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்