ரயில்வே வாரியத்தின் NTPC பிரிவுகளுக்கான பணியிடத் தகுதித் தேர்வு முடிவுகள் கடந்த ஜனவரி 15ஆம் தேதி வெளியாகின. இந்த தேர்வு முடிவுகளில் குளறுபடி இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
இந்த விவகாரம் பிகார், உத்தரப் பிரதேச மாநிலங்களில் பூதாகரமாக வெடித்துள்ளது. குறிப்பாக, பிகார் மாநிலத்தில் மாணவர்கள் கடந்த இரு நாள்களாக பெரும் போராட்டங்களை நடத்திவருகின்றனர். பல இடங்களில் ரயில் மறியல், ரயில்வே அலுவலகங்கள் முற்றுகை போன்றவற்றை அவர்கள் மேற்கொண்டனர்.
இதன் காரணமாக பிகார் மாநில வழித்தடங்களில் ரயில்வே போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளானது. இந்நிலையில் போராட்டக்காரர்களுக்கு ரயில்வே வாரியம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
மாணவர்கள் பெரும் போராட்டம் தேர்வு முடிவுகளில் எந்த குளறுபடிகளும் இல்லை என விளக்கமளித்துள்ள வாரியம், தொடர்ந்து போராட்டம் நடத்தும்பட்சத்தில் போராட்டதில் ஈடுபடும் மாணவர்கள், இனி வரும் காலங்களில் ரயில்வே பணியிட தேர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்படுவார்கள் என அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க:HOROSCOPE: ஜனவரி 26 ராசிபலன் - உங்க ராசிக்கு எப்படி?