நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. வைரஸ் தடுப்பு பணியில் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். தலைநகரான டெல்லியில் அதிகரித்துவரும் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் முயற்சியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.இது குறித்து அரசு அலுவலர்களுடன் மத்திய உள் துறைச் செயலர் அஜய் குமார் பெல்லா ஆலோசனை மேற்கொண்டார்.
அவர் கூறுகையில், "தற்போது பண்டிகை காலத்தில் கரோனா பாதிப்புகள் அதிகரிப்பதை காணமுடிகிறது. மக்களின் நடமாட்டம் அதிகளவில் உள்ளன.
பண்டிகை காலத்தை மக்கள் பாதுகாப்பான முறையில் கொண்டாட வேண்டும். கரோனா குறித்த பாதுகாப்பு விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். தற்போது, 15,789 படுக்கைகள் மக்களின் பயன்பாட்டிற்காக காலியாக உள்ளன.