தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'நாட்டில் இரண்டாம் அலை அடங்கிவருகிறது' - ஒன்றிய அரசு - ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம்

இந்தியாவில் கோவிட்-19 இரண்டாம் அலை உச்ச எண்ணிக்கை, மே 7ஆம் தேதி பதிவான நிலையில், அந்த எண்ணிக்கையிலிருந்து 68 விழுக்காடு வரை பாதிப்பு தற்போது குறைந்துள்ளது.

Lav Agarwal
Lav Agarwal

By

Published : Jun 4, 2021, 8:16 PM IST

நாட்டின் கோவிட்-19 தொற்று இரண்டாம் அலை குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், அமைச்சகத்தின் இணை செயலர் லாவ் அகர்வால் பங்கேற்று பேசினார்.

அவர் பேசியதாவது, "இந்தியாவில் கோவிட்-19 இரண்டாம் அலை உச்சம் மே 7ஆம் தேதி பதிவான நிலையில், அந்த எண்ணிக்கையிலிருந்து 68 விழுக்காடு பாதிப்பு தற்போது குறைந்துள்ளது. நாட்டின் 29 மாநிலங்களில் ஐந்தாயிரத்துக்கும் குறைவகவே தினசரி பாதிப்புகள் ஏற்படுகின்றன.

ஐந்து மாநிலங்களில் தான் 66 விழுக்காடு பாதிப்பு பதிவாகிவருகிறது. எனவே, இந்த குறைவான இடங்களில் உரிய கட்டுப்பாடுகளுடன் பாதிப்பு பரவலை தடுத்து நிறுத்திவிடலாம். மே 10ஆம் தேதி 37 லட்சத்திற்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 16.35 லட்சம் பேராக குறைந்துள்ளது" என்றார்.

இதையும் படிங்க:"நடப்பாண்டு இறுதிக்குள் ஏர் இந்தியா விற்கப்படும்" அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உறுதி!

ABOUT THE AUTHOR

...view details