ஸ்ரீநகர் (ஜம்மு காஷ்மீர்): பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தது தொடர்பாக காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர், பாண்டிபோரா, புட்காம் மற்றும் குப்வாரா உள்ளிட்ட 12 இடங்களில் மாநில புலனாய்வு அமைப்பு (State Investigation Agency - SIA) இன்று (டிச.3) காலை முதல் சோதனை நடத்தி வருகிறது.
காஷ்மீர்: 12 இடங்களில் மாநில புலனாய்வு அமைப்பு சோதனை! - SIA raids
பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி வழங்கியது தொடர்பாக காஷ்மீரில் உள்ள 12 இடங்களில் மாநில புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தி வருகிறது.
காஷ்மீர்: 12 இடங்களில் மாநில புலனாய்வு அமைப்பு சோதனை!
முக்கியமாக பர்சுல்லாவில் உள்ள ஹுரியத் செயல்பாட்டாளர் முகம்மது அஷ்ரஃப் வீடு, பீர்பாக்கில் உள்ள முஷ்டக் அகமது வானி வீடு, குப்வாராவில் உள்ள முகம்மது சயீது பாட் வீடு மற்றும் பாரமுல்லாவில் உள்ள முசாஃபர் ஹுசைன் பட் வீடு ஆகிய இடங்களில் மாநில புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:நிதி நிறுவன முறைகேடு: 16 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை