அமராவதி (ஆந்திரா):திருப்பதியில் கரோனா அலை காரணமாக இரண்டு ஆண்டுகளாக தரிசனத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கரோனா தொற்று குறைந்து காணப்படுவதால் சென்ற மாதம் முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட் சேவையும் தொடங்கப்பட்டது.
திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் கரோனாவிற்கு முன்பே முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது. கரோனவால் இரண்டு ஆண்டுகள் தடைபட்ட சிறப்பு சலுகையை வழங்க இருப்பதாக தேவஸ்தானம் தகவல் அளித்துள்ளது. அதன்படி இன்று (ஏப்ரல் 1) முதல் இதற்கான டோக்கன் வழங்கப்பட்டது.