காஷ்மீர்:நேற்று (மே25) காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள கார்கில் - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் வந்த கார் ஒன்று 1,200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த எதிர்பாராத விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ஹவுஸ் காவல் நிலையத்தின் சோன்மார்க் யூனிஸ் பஷீர் கூறுகையில், “JK 12-7466 என்ற எண்ணைக் கொண்ட கார், கார்கிலில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த கார் சினி நல்லா என்ற பகுதிக்கு அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், கார் சுமார் 1,200 அடி ஆழத்தில் உள்ள பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
7 பேரின் உடல் மீட்பு:இதனையறிந்த மீட்புக்குழுவினர், மீட்புப்பணிகளை துரிதப்படுத்தினர். பின்னர் மேற்கொண்ட தீவிர மீட்புப்பணியில், முதலில் 7 பேரின் உடலை சடலமாக மீட்டனர். பின்பு, இன்று காலை மேலும் இரண்டு உடல்கள் மீட்கப்பட்டன. இந்த விபத்தில் இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில், இருவர் ஜம்மு மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் ஆவர்.
மீதமுள்ள ஏழு பேரில் பூஞ்ச் பகுதியைச் சேர்ந்த லியாகத் ஹுசைனின் மகன் டிரைவர் அசார் இக்பால், குஜராத்தின் சூரத்தைச் சேர்ந்த திலீப் குமாரின் மகன் அங்கித் திலீப், மங்கள் மர்மோவின் மகன் காந்தி மர்மோ மற்றும் ஜார்க்கண்ட் கடம் மர்மோவின் மகன் மங்கள் மர்மோ என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.