தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிக்கலில் தவிக்கும் ஈழத்தமிழர்கள்... 38 பேரை என்.ஐ.ஏ-விடம் ஒப்படைத்த கர்நாடக போலீஸ்!

கடந்த மாதம், கனடாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற 38 ஈழத்தமிழர்கள் மங்களூருவில் பிடிபட்டனர். இந்நிலையில் அவர்களுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் தொடர்பு இருக்கலாம் எனும் சந்தேகத்தின் அடிப்படையில், அந்த 38 பேரையும் தேசிய புலனாய்வு முகமையிடம் (National Investigation Agency) கர்நாடக மாநில காவல் துறை ஒப்படைத்துள்ளது.

சிக்கலில் தவிக்கும் ஈழத்தமிழர்கள்: 38 ஈழத்தமிழர்களை என்.ஐ.ஏ-விடம் ஒப்படைத்த கர்நாடக போலீஸ்
சிக்கலில் தவிக்கும் ஈழத்தமிழர்கள்: 38 ஈழத்தமிழர்களை என்.ஐ.ஏ-விடம் ஒப்படைத்த கர்நாடக போலீஸ்

By

Published : Jul 27, 2021, 6:37 PM IST

பெங்களூரு (கர்நாடகா): கடந்த மாதம் மங்களூருவில் பிடிபட்ட 38 ஈழத்தமிழர்கள் தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் 10ஆம் தேதி மங்களூரு நகரின் பல்வேறு பகுதிகளில் வாடகை அறை எடுத்தும், தங்கும் விடுதிகளிலும் தங்கியும் இருந்த 38 ஈழத்தமிழர்கள் அதிரடியாக கர்நாடக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

அவ்வாறு கைது செய்யப்பட்ட 38 பேரும் மார்ச் மாதத்தில் இலங்கையின் வடக்குப்பகுதியில் இருந்து, அகதிகளாக தமிழ்நாட்டின் தூத்துக்குடிக்கு வந்தவர்கள் எனவும், இந்தியாவில் இருந்து கனடா செல்ல அவர்கள் ஒரு ஏஜென்டின் உதவியுடன் முயற்சியில் இறங்கியதும் விசாரணையில் தெரியவந்தது.

கனடா செல்லும் முனைப்பில் இந்தியா வந்த ஈழத்தமிழர்கள்

மேலும் கனடா செல்லும் பயணத்திற்காக ஈழத்தமிழர்கள் தலா ரூ.5 முதல் 10 லட்சம் வரை கட்டணத்தொகையாக அந்த ஏஜென்டிடம் கொடுத்திருந்ததும் தெரிய வந்துள்ளது.

கனடா செல்லும் பயணத்தில், முன்னதாக தூத்துக்குடியை அடைந்த அவர்கள் பெங்களூருவிற்கு பேருந்து வழியாக பயணித்து, பின்னர் மங்களூரு வந்து தங்கியிருக்கின்றனர். பின்னர், பிடிபட்ட அவர்கள் மீது கர்நாடகாவிலும் தமிழ்நாட்டிலும் ஊடுருவல் வழக்குப் பதியப்பட்டது.

இந்நிலையில் அவர்களுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் தொடர்பு இருக்கலாம் எனும் சந்தேகத்தின் அடிப்படையில், அந்த 38 பேரையும் தேசிய புலனாய்வு முகமையிடம் (National Investigation Agency) கர்நாடக மாநில காவல் துறை இன்று ஒப்படைத்துள்ளது.

இதனால் ஈழத்தமிழர்கள் 38 பேரும் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ராகுல் காந்தியின் டிராக்டர் பேரணி குறித்து டெல்லி போலீசார் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details