பெங்களூரு:தமிழ்நாட்டிலிருந்து கர்நாடக மாநிலம் மைக்கோ லேஅவுட் வழியாக அம்பர்கிரிஸ் எனப்படும் திமிங்கல வாந்தி கடத்தப்பட உள்ளதாக பெங்களூரு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், காவலர்கள் மைக்கோ லேஅவுட் சாலைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மூன்று பேருடன் வந்த காரில் திமிங்கல வாந்தி சிக்கியது. உடனே அதனை பறிமுதல் செய்த காவலர்கள், மூவரையும் கைது செய்தனர். முதல்கட்ட தகவலில், கைது செய்யப்பட்டவர்களின் பெயர் பன்னீர்செல்வம், ஆனந்த் சேகர், மஞ்சு என்பதும், பறிமுதல் செய்யப்பட்ட அம்பர்கிரிஸின் மதிப்பு ரூ. 4 கோடி என்பதும் தெரியவந்துள்ளது.