சிவமொக்கா: உறுதி மட்டும் நம் மனதில் இருந்தால், குறைகள் நம்மை ஒருபோதும் சோகப்படுத்தாது என்பதற்கு ஓர் உதாரணம் மீனா. பிறக்கும்போதே தசைநார் செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்.
இந்த பலவீன தசைகள் காரணமாக சிறுவயதில் இருந்தே படுத்த படுக்கையாக இருக்கிறார். இதெல்லாம் அவரது லட்சியப் பாதையை தடுக்கவில்லை.
மக்கள் விரும்பும் கலைப்பொருள்களை உருவாக்கி, உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டிலும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை சேர்த்துள்ளார். படுத்தப் படுக்கையாக இருந்தபடியே வீட்டு உபயோகப் பொருள்களை உருவாக்கி வருகிறார்.
உலகையே திரும்பி பார்க்க வைத்த மாற்றுத்திறனாளி பெண் இவரின் கலைப் படைப்புகள் ஆன்லைனில் விற்கப்படுகின்றன. மீனா, கலைப் பொருள்கள் பயன்பாட்டை 10ஆம் வகுப்பு படிக்கும் போது கற்றுக்கொண்டுள்ளார்.
எனினும் அவரால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. எனினும், சுய ஆர்வத்துடன் தொடர்ந்து கற்றுக்கொண்டார். இதன் காரணமாக, கலைப் பொருள்களை உருவாக்கி சர்வதேச கவனத்தை ஈர்த்துவருகிறார்.
மீனா உருவாக்கிய கலைப்பொருள்கள் இது குறித்து மீனா கூறுகையில், “நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. சுதந்திரமாக இருக்கவே விரும்புகிறேன். எனது படைப்புகள் எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கின்றன” என்றார்.