கர்நாடகா: ஜுவர்கி தாலுகா, கலாபுராகி மாவட்டத்தின் கல்லூர் கே கிராமத்தில் வாழ்ந்துவருபவர் பீமாபாய் பூஜாரி (75). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் இளைய மகன் யெல்லப்பா பூஜாரி மாற்றுத்திறனாளி. இந்நிலையில் இன்று காலை பீமாபாயின் மூத்த மகன் கழிவறைக்கு வெளியே சென்றபோது, யெல்லப்பா தனது தாயிடம் மது அருந்துவதற்காக பணம் கேட்டுள்ளார்.
தாயை கொடூரமாக கொலை செய்த மகன்!
கர்நாடகா: மது வாங்குவதற்கு பணம் கொடுக்காததற்காக, தாயின் தலையில் கல்லை எறிந்து, மாற்றுத்திறனாளி மகன் கொடூரமாக கொலை செய்துள்ளார்.
தாயை கொடூரமாக கொலை செய்த ஊனமுற்ற மகன்
அப்போது பணம் கொடுக்க மறுத்த தாயை, யெல்லப்பா கல்லைத் தூக்கி தலையில் நான்கு முறை எறிந்து கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், யெல்லப்பாவை கைது செய்தனர். பின் காவல் உதவி ஆய்வாளர் ராஜகுமார் ஜமகோண்ட் தலைமையில் காவல் துறையினர், சம்பவ இடத்தினை பார்வையிட்டனர். இது குறுத்து நெலோமி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒருதலை காதலால்..எட்டு மாத குழந்தை வெட்டிக் கொலை!