சிலர் மாணவர்களாக இருக்கும்போது அரசியல் குறித்த புரிதல் ஏற்பட்டு, அது தொடர்பான அமைப்புகளில் தன்னை இணைத்துக்கொண்டு, தான் இறுகப்பற்றிக்கொண்ட கருத்தியல் தொடர்பாக கற்றுத்தெளிந்தும் களச்செயல்களில் ஈடுபட்டும் ஓர் அரசியல்வாதியாக மாறுவர். ஆனால், வெகுசிலருக்கே தான் பிறக்கும் போதே, அரசியல்வாதியாக வார்த்து எடுக்கப்படும் சந்தர்ப்பம் கிட்டும். அப்படி பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் குடும்பத்தின் வாரிசாக பிறந்து, அக்கட்சியின் நம்பிக்கைத்தூண் தானாக முயற்சித்து வருபவர் தான் ராகுல் காந்தி.
கேம்பிரிட்ஜ் படிப்பு முதல் நிறுவனர் இயக்குநர் வரை
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்கும் சோனியா காந்தி தம்பதிக்கும் ஜுன் 19, 1970 ஆம் ஆண்டில் மூத்தமகனாகப் பிறந்தவர். தான் வளரும் போதே, தன் பாட்டி இந்திரா காந்தியையும் ராஜிவ் காந்தியையும் இழந்து பிரிவுத்துயரால் தவித்தவர். அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்த தனது கல்லூரிப் படிப்பைத் தொடங்கிய ராகுல் காந்தி, ப்ளோரிடாவில் உள்ள ரோலின்சு கல்லூரியில் 1994ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டத்தைப் படித்து முடித்தார். இதைத்தொடர்ந்து கேம்பிரிட்ஜ் பல்கலையில் எம்.பில் பட்டத்தை நிறைவு செய்தார்.
இதைத்தொடர்ந்து தான் யார் என்றே காட்டிக்கொள்ளாமல், மைக்கேல் போர்டேர்ஸ் நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். அதைத்தொடர்ந்து பின்னர் தாய்நாடு திரும்பி, 2002ஆம் ஆண்டு மும்பை தொழில் நுட்ப நிறுவனமான பேக் ஆப்ஸ் சர்வீசஸ் தனியார் நிறுவனத்தில் இயக்குநராக நியமிக்கப்பட்டார். அவ்வப்போது தனது அலுவலகப் பணியை செய்துகொண்டே, மக்களுக்கான களப்பணியில் ஈடுபட்டுவந்த ராகுல் காந்தி, 2004ஆம் ஆண்டு தான் முழு நேர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து தனது தந்தையின் தொகுதியான உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் 2004ஆம் ஆண்டு போட்டியிட்டு வென்றார்.
ராகுல் காந்தி முதல் ஆர்ஜி வரை:
2009ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அப்போது உத்தரப்பிரதேச மாநிலத்தின் தேர்தல் கூட்டங்களில் சூறாவளிப் பரப்புரை செய்து 125 பரப்புரைக் கூட்டங்களில் பேசினார். இதன் பலனாக 80 மக்களவைத் தொகுதிகள் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் 21 தொகுதிகளைக் காங்கிரஸ் கைப்பற்றியது.
இதைத்தொடர்ந்து தனது சொந்தக் கட்சிக்காரர்களால் ராகுல்காந்தி அன்று முதல் ஆர். ஜி என்று செல்லமாக அழைக்கப்படுகிறார்.
துணைத்தலைவர் முதல் தற்போதைய எம்.பி.வரை: