காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி 49ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும், கொண்டாடியும் வருகின்றனர். அதைத்தொடர்ந்து, புதுச்சேரியில் ராகுல் காந்தி தேசிய பேரவை சார்பில் மணக்குள விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தங்க தேர் இழுக்கப்பட்டது.
பிரியங்கா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜை - முதலமைச்சர் பங்கேற்பு! - முதலமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரி: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு மணக்குள விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
முதலமைச்சர் நாராயணசாமி
அதில் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்றார். மேலும் இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு செயலாளரும், ராகுல் காந்தி தேசிய பேரவை தலைவருமான சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:காரைக்கால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!