தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புத்தாண்டையொட்டி மணக்குள விநாயகர் கோயிலில் பக்தர்கள் சிறப்பு தரிசனம் - Devotees visit Manakula Vinayagar temple

ஆங்கில பிறப்பை முன்னிட்டு விடியற்காலை முதல் வரிசையில் இன்று மணக்குள விநாயகர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

புத்தாண்டையொட்டி மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு தரிசனம்
புத்தாண்டையொட்டி மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு தரிசனம்

By

Published : Jan 1, 2023, 4:41 PM IST

புத்தாண்டையொட்டி மணக்குள விநாயகர் கோயிலில் பக்தர்கள் சிறப்பு தரிசனம்

புதுச்சேரி:ஆங்கிலப் புத்தாண்டு 2023 பிறந்ததை முன்னிட்டு புதுச்சேரியின் பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் மணக்குள விநாயகருக்கு விடியற்காலை சிறப்பு பூஜை செய்து, தங்க கவசம் சாத்தப்பட்டது.

புத்தாண்டு அன்று மணக்குள விநாயகரை வழிபட புதுச்சேரி பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் விடியற் காலை முதல் இருந்தே வரிசையில் நின்று வணங்கிச் செல்கின்றனர். பக்தர்கள் வசதிக்கேற்ப கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்புகள் வைக்கப்பட்டு, சுவாமியை வழிபட சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். மணக்குள விநாயகரை வழிபட்டு வெளியேறும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.

பக்தர்கள் எந்தவித அசம்பாவிதங்களையும் சந்திக்காத வகையில் போலீசார் ஆங்காங்கே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு பக்தர்களை வழி அனுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க:New Year 2023: கபாலீஸ்வரர் கோயிலில் அலைமோதும் கூட்டம்

ABOUT THE AUTHOR

...view details