லக்னோ (உத்தரப்பிரதேசம்): சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை 'வருங்கால பிரதமர்' எனக் கூறி லக்னோவிலுள்ள சமாஜ்வாதி கட்சித் தலைமை அலுவலகத்தின் வெளியே கட்சி தொண்டர்களால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
சமாஜ்வாதி கட்சி செய்தித் தொடர்பாளர் ஃபக்ருல் ஹசன் சாந்த் கூறும் போது, "அகிலேஷ் யாதவ் பிறந்தநாள் ஜூலை 1ஆம் தேதி கொண்டாடப்பட்டது. ஆனால், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த பலர் அகிலேஷின் பிறந்தநாளை தற்போது வரை கொண்டாடி வருகின்றனர். மேலும், அகிலேஷ் யாதவ் நாட்டின் பிரதமராகி மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் எனக் கட்சி தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்" எனத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க:"கெளதமி பாஜகவில் இருந்ததால் புகார் எடுக்கவில்லை.. விலகியதும் எடுத்துக் கொண்டார்கள்" - வானதி ஸ்ரீனிவாசன்!
இந்த நிலையில், அகிலேஷ் யாதவை 'வருங்கால பிரதமர்' எனச் சித்தரிக்கும் சுவரொட்டிகள் தொடர்பாக சமாஜ்வாடி கட்சியை உத்தரப்பிரதேச பா.ஜ.க அமைச்சர் டேனிஷ் ஆசாத் அன்சாரி நேற்று (அக்.22) ஞாயிற்றுக்கிழமை கூறும் போது, சமாஜ்வாடி கட்சி பகல் கனவு காண்பதாகவும், நாட்டு மக்கள் பிரதமர் மோடியை நம்புவதாகவும், மூன்றாவது முறையாகவும் பிரதமராக மோடியை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் எனத் தெரிவித்தார்.