தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அமித் ஷா தலைமையில் தென் மண்டல கவுன்சில் கூட்டம் - பொன்முடி பங்கேற்பு

உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் தென் மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள், அமைச்சர்கள், ஆளுநர்கள், நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இதில், தமிழ்நாடு சார்பில் அமைச்சர் பொன்முடி பங்கேற்றுள்ளார்.

தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் தலைவர்கள்,Southern Zonal Council meeting began
தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் தலைவர்கள்,Southern Zonal Council meeting began

By

Published : Nov 14, 2021, 5:24 PM IST

Updated : Nov 14, 2021, 7:04 PM IST

திருப்பதி:ஆந்திர மாநிலம் திருப்பதியில் தென் மண்டல கவுன்சில் கூட்டம் இன்று மாலை 3 மணிக்கு தொடங்கியது. தென் மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள், அமைச்சர்கள், ஆளுநர்கள், நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன் கூட்டத்தை தொடங்கிவைத்தார். உள்துறை அமைச்சர் அமித் ஷா முடிவுரை ஆற்ற உள்ளார்.

கூட்டத்திற்கு முன்பு தலைவர்கள்

இந்தக் கூட்டத்தின் நிகழ்ச்சியில் 26 தீர்மானங்கள் விவாதிக்கப்பட உள்ளன. கடந்த கூட்டத்தின் முடிவுகள் தொடர்பான இரண்டு அறிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது. மேலும், 24 பிரச்சினைகள் குறித்தும், அடுத்த கூட்டம் நடைபெறும் இடம் குறித்தும் முடிவெடுக்கப்பட உள்ளது. இக்கூட்டம் இரவு 7 மணிவரை நடைபெறுகிறது.

தொடங்கியது தென் மண்டல கவுன்சில் கூட்டம்

நிகழ்வில் பங்கேற்றத் தலைவர்கள்

  • தமிழ்நாடு - அமைச்சர் பொன்முடி, உயர்கல்வித்துறை
  • கேரளா - அமைச்சர் ராஜன், வருவாய்துறை
  • தெலங்கானா - அமைச்சர் மஹ்மூத் அலி, உள்துறை
  • புதுச்சேரி - முதலமைச்சர் ரங்கசாமி
  • புதுச்சேரி - துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை சௌந்தராஜன்
  • கர்நாடகா - முதலமைச்சர் பசவராஜ் பொம்மை
  • ஆந்திரா - முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி
  • அந்தமான் நிகோபார் - துணைநிலை ஆளுநர் தேவந்திர குமார் ஜோஷி
  • லட்சத்தீவு - நிர்வாகி, பிரபுல் பட்டேல்
    தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் தலைவர்கள்

இதையும் படிங்க: ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டம்: ரூ.700 கோடியை வங்கிக் கணக்கில் போட்ட பிரதமர்

Last Updated : Nov 14, 2021, 7:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details