சென்னை: கேரளாவில் இருந்து பீகாருக்கு இயக்கப்படும் வாரந்திர சிறப்பு ரயில் தமிழகத்தின் சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
பீகார் மாநிலம் தர்பங்காவில்(Darbhanga) இருந்து வாரத்தின் திங்கட்கிழமை மட்டும் இரவு 9:15 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில், ஆதே வாரத்தின் வியாழக்கிழமை அன்று காலை 6 மணிக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தை வந்து சேரும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. டிசம்பர் 12-ஆம் தேதி வரை ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுமார்க்கத்தில் வாரத்தின் வியாழக்கிழமையில் எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் ரயில், ஞாயிற்றுக்கிழமை காலை 6:30 மணிக்கு தர்பங்கா(Darbhanga) ரயில் நிலையத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரந்திர சிறப்பு ரயில் டிசம்பர் 15ஆம் தேதி வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
தமிழகத்தின் பெரம்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கோவை ரயில் நிலையங்களில் இந்த வாரந்திர சிறப்பு ரயில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.