மதுரை:அகமதாபாத் - திருச்சி இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர ரயில் சேவை மேலும் இரு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, "அகமதாபாத்தில் இருந்து திருச்சிக்கு வியாழக்கிழமை தோறும் காலை 9.30 மணிக்கு சிறப்பு ரயில் (வண்டி எண்: 09419) இயக்கப்படுகிறது. இந்த ரயில் தொடா்ந்து பிப். 2, 9, 16, 23, மற்றும் மாா்ச் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் (9 சேவைகள்) இயக்கப்பட உள்ளன.
மறுமாா்க்கமாக திருச்சியில் இருந்து அகமதாபாத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 5.45 மணிக்கு சிறப்பு ரயில் (வண்டி எண்: 09420) இயக்கப்படுகிறது. இந்த ரயில் தொடா்ந்து பிப். 5, 12, 19, 26, மாா்ச் 5, 12, 19, 26, ஏப். 2 ஆகிய தேதிகளில் (9 சேவைகள்) இயக்கப்படுகின்றன.
இந்த ரயில் தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன்கோவில், சீா்காழி, சிதம்பரம், கடலூா் துறைமுகம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா், பெரம்பூா், அரக்கோணம் வழியாக இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயிலுக்கன டிக்கெட் முன்பதிவு இன்று (பிப்.2) காலை 8 மணி முதல் தொடங்கவுள்ளதாக" தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:‘நிதிநிலை அறிக்கை, மக்கள் விரோத அறிக்கையாகும்’ - தொல். திருமாவளவன் விமர்சனம்