தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி அவசர சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் - தகவல்! - மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லி அவசர சட்டம் அனுமதி

டெல்லி அவசர சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடப்பு நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடரில் மசோதா நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Delhi
Delhi

By

Published : Jul 25, 2023, 10:16 PM IST

டெல்லி :டெல்லி அவசர சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஜூலை. 25) மாலை கூடிய நிலையில், டெல்லி அவசர சட்டத்திற்கு பதிலாக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நடப்பு நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் கூறப்பட்டு உள்ளது. தலைநகர் டெல்லியில் குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிடை மாற்றம் குறித்த அதிகாரம் துணை நிலை ஆளுநர் மற்றும் மத்திய அரசிடமே இருந்த நிலையில் அதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

கடந்த 2019ஆம் ஆண்டு இந்த வழக்கு குறித்த தீர்ப்பில் மத்திய அரசுக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்பு வழங்கியது. உச்ச நீதிமன்றத்தை தீர்ப்பை எதிர்த்து டெல்லி அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது.

மாநில அரசின் ஆட்சி மற்றும் நிர்வாகத்தை நிர்வகிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு கிடையாது என்றும் அதிகாரிகள் நியமனம், நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் மாற்றம் ஆகியவற்றில் டெல்லி அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து டெல்லியில் முக்கிய பொறுப்புகளில் உள்ள அதிகாரிகளை இடமாற்றி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நடவடிக்கை மேற்கொண்டார்.

இந்நிலையில், டெல்லியில் குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம், பணியிட மாற்றம் உள்ளிட்ட பணிகளை நிர்வகிக்க முதலமைச்சர், தலைமைச் செயலாளர், முதன்மை உள்துறை செயலாளர் அடங்கிய தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையத்தை அமைத்து அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறும் வகையில் மத்திய அரசின் சட்டம் இருப்பதாக கடுமையாக சாடினார். தொடர்ந்து அவசர சட்டத்திற்கு எதிராக பல்வேறு மாநிலங்களின் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

மத்திய அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி முறையிட்டது. வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அரசியலமைப்பு அமர்வு விசாரிக்க நீதிபதிகள் பரிந்துரை செய்தனர். இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடங்கியது.

நடப்பு நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடரில் டெல்லி அவசர சட்டத்திற்கு பதிலாக மசோதாவை தாக்கல் அரசியலமைப்பு சட்டமாக மாற்ற நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஜூலை. 25) கூடிய நிலையில், டெல்லி அவசர சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து விரைவில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க :பிரதமர் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்... எதிர்க்கட்சிகள் நாளை தாக்கல்?

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details