தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Bengaluru Opposition meeting : திமுக, காங்கிரஸ் உள்பட 26 எதிர்க்கட்சிகள் பங்கேற்பு - தகவல்! - பெங்களூரு எதிர் கட்சிகள் ஆலோசனை கூட்டம்

பெங்களூருவில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 26 கட்சிகள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Opposition meeting
Opposition meeting

By

Published : Jul 16, 2023, 9:20 PM IST

டெல்லி :பெங்களூரு எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் 26 கட்சிகள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜகவுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த பணியை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், மற்றும் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் முன்னெடுத்து சென்றனர்.

பல்வேறு மாநில எதிர்ட்கட்சித் தலைவர்களை சந்தித்து நிலையில், கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நிதிஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட 15 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன.

இந்நிலையில், இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது. ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ள நிலையில் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் தலைமையில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ஏறத்தாழ 26 கட்சிகள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லி அவசர சட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்து உள்ள நிலையில், இந்த கூட்டத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

அதேபோல், மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்து உள்ளார். மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்த பிறகு, பாஜக மீது கடும் எதிர்ப்பலை கிளம்பி உள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அந்த கட்சியின் கொள்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டு போராட்ட திட்டத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கான நடவடிக்கைகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் என்றும், எதிர்க்கட்சி அரசுகளை கவிழ்ப்பதற்கும், பாஜக ஆளாத மாநிலங்களை ஆளுநர்கள் மூலம் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கும் எடுக்கப்படும் முயற்சிகளை வெளிக் கொணர இந்த கூட்டம் ஒரு தீர்க்கமான சந்திப்பாக இருக்கும் மற்றும் பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் சிவசேனா உத்தவ் அணியின் எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்காள முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால், மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க :பாஜகவின் அடுத்தக்குறி மே.வங்கம்? 5 மாதங்களில் ஆட்சி கவிழ்ப்பு என சர்ச்சை கருத்து!

ABOUT THE AUTHOR

...view details