கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சௌரவ் கங்குலி இன்று (புதன்கிழமை) மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இன்று காலை லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
சௌரவ் கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி! - கங்குலி
14:39 January 27
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சௌரவ் கங்குலி இன்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு கங்குலி லேசான நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தா உட்லண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சில நாள்கள் தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த முறை சௌரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு சில கட்சிகள் அரசியல் அழுத்தம் கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டுக்கு சம்பந்தப்பட்ட கட்சிகள் மறுப்பு தெரிவித்தன என்பது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: கங்குலி விரைவில் குணமடைய மணல் சிற்பம் மூலம் வாழ்த்து தெரிவித்த சுதர்சன் பட்நாயக்!