டெல்லி: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு கடந்த ஆக.11ஆம் தேதி கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு இன்று (ஆக. 13) கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் உறுதி செய்துள்ளார். அவரின் ட்வீட்டில்,"காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு இன்று கரோனா தொற்று கண்டறியப்பட்டது. அரசின் வழிமுறைப்படி அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்" என குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன், கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் சோனியா காந்தி கரோனாவால் பாதிக்கப்பட்டார்.