கடந்த ஜனவரி 19ஆம் தேதி, சிறாரின் ஆடையைக் கழற்றாமல் மார்பைத் தொடுவது போக்சோ சட்டத்தின் படி பாலியல் வன்முறை அல்ல என மும்பை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. 2 வயது சிறுமியை பழம் தருவதாகக் அழைத்து சென்ற 39 வயது நபர், பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆடையை கழற்ற முயற்சித்தார்.
இதுகுறித்த வழக்கில், "ஆடையைக் கழற்றாமல் அவர் பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார். எனவே, இது போக்சோவின் படி பாலியல் வன்முறை அல்ல. ஆனால், இந்திய தண்டனைச் சட்டம் 354இன் படி பெண்ணை மானபங்கம் செய்வதாகும். போக்சோ சட்டத்தில் கீழ் கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. எனவே, இம்மாதிரியான வழக்குகளில் குற்றத்தை நிரூபிப்பதற்கு தகுந்த ஆதாரங்கள் தேவை" என நீதிபதி புஷ்பா கணேடிவாலா குறிப்பிட்டிருந்தார்.