தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம் - லலித்பூர் விரைகிறார் பிரியங்கா காந்தி!

கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து புகார் அளிக்கச் சென்ற சிறுமியை காவல்நிலைய அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் பாதிக்கப்பட்ட சிறுமியை நேரில் சந்திப்பதற்காக பிரியங்கா காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழு லலித்பூர் செல்ல இருக்கிறது.

பிரியங்கா
பிரியங்கா

By

Published : May 5, 2022, 7:52 PM IST

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தில், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியை, கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி நான்கு பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.

இது தொடர்பாக புகார் அளிப்பதற்காக சிறுமி, லலித்பூர் மாவட்டத்தில் உள்ள பாலி காவல்நிலையத்திற்கு தனது உறவினருடன் சென்றுள்ளார். அப்போது, காவல் நிலையத்தின் பொறுப்பு அதிகாரி (SHO)திலக்தாரி சரோஜ் என்பவர், அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது.

தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று இந்தச் சம்பவம் குறித்து, காவல்துறை கண்காணிப்பாளரிடம் கொண்டு சென்றதால், கடந்த 3ஆம் தேதி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, காவல் நிலையத்தின் பொறுப்பு அதிகாரி திலக்தாரி சரோஜை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில், அக்கட்சியின் 6 பேர் கொண்ட குழுவினர், லலித்பூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தைச் சந்திக்கவுள்ளனர்.

இதையும் படிங்க: குஜராத்தில், 600 இஸ்லாமிய மீனவர்கள் கருணை கொலை கோரி மனு!

ABOUT THE AUTHOR

...view details