பிகார் மாநிலம் காவையா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் ஆறு குழந்தைகள் சோளத்தை வறுத்தனர். அப்போது அந்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. உடனே அருகே இருந்தவர்கள் வீட்டில் எரிந்துகொண்டிருந்த தீயை அணைக்க முயன்றன.
இருப்பினும், தீ வேகமாக வீடு முழுவதும் பரவியது. இந்த விபத்தில் ஆறு குழந்தைகளும் உடல் கருகி உயிரிழந்தன.
பிகாரில் தீ விபத்தில் 6 குழந்தைகள் உயிரிழப்பு இது குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் குழந்தைகளின் சடலங்களை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: இமாச்சலில் பயங்கர தீ விபத்து: 4 பேர், பல விலங்குகள் உயிரிழப்பு!