மகாராஷ்டிரா: புனேவில் 15 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனியாக இருந்த சிறுமியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ஆறு பேர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
மேலும், இது குறித்து வெளியில் கூறினால் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவிடுவதாகக் கூறி மிரட்டியுள்ளனர். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் நேற்று (டிச.27) காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.