டெல்லி:தலைநகர் டெல்லி அருகே ஹைதர்பூர் நீர் சுத்திகரிப்பு ஆலையில் சிக்கிம் பாதுகாவலர் ஒருவர், தனது சகப் பணியாளர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
இதில், இரண்டு பாதுகாவலர்கள் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் காயமடைந்து டெல்லி அம்பேத்கர் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். முதற்கட்டத்தகவலில் துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் கைதுசெய்யப்பட்டார் எனத் தெரிய வந்துள்ளது.