இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கரோனா தடுப்பூசிகளுடன் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதுவரை மூன்று லட்சம் டோஸ் ஸ்புட்னிக் வி தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளன. இந்தத் தடுப்பூசிகளை இந்தியாவில் விநியோகிப்பதற்கும், சப்ளை செய்தவதற்கும், தயாரிப்பதற்கும் ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு டோஸ் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் விலை 1,195 ரூபாயாக நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில், ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியைத் தயாரிக்க சீரம் நிறுவனம் சார்பில் மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளது.