புதுச்சேரி: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து 740 கிலோமீட்டர், புதுச்சேரியில் இருந்து 700 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இந்த நிவர் புயல் நாளை மறுநாள் பிற்பகல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் இதன் எதிரொலியாக புதுச்சேரி துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் அம்மாநில மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
மேலும் அரசின் அறிவுறுத்தலின்படி மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் புதுச்சேரிக்கு விரைந்துள்ளனர்.
இதையும் படிங்க: மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்ல வேண்டாம் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவுறுத்தல்