தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ஆன்மீக தேசியவாதத்தை என்னுடைய ஒவ்வொரு ரத்த நாளங்களும் சுமக்கின்றன' - வசுந்தரா ராஜே

ஆன்மீகத்தையும், பாஜகவின் தேசியவாதத்தையும் என்னுடைய ஒவ்வொரு ரத்த நாளங்களும் சுமந்துச் செல்கின்றன என ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான வசுந்தரா ராஜே சிந்தியா கூறியுள்ளார்.

Show of strength: Raje warns Gehlot, silences anti-faction
பாஜக மூத்த தலைவர் வசுந்தரா ராஜே சிந்தியா

By

Published : Mar 8, 2021, 4:42 PM IST

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் அரசியல் நிலைமைகளை ஆராயும் பொருட்டு பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அண்மையில் பயணமொன்றை மேற்கொண்டிருந்தார்.

மாநில அளவில் கட்சியின் மூத்த தலைவர்களைச் சந்தித்து பேசிய அவர், பாஜகவினர் ஒவ்வொருவரும் கட்சிக்கு எவ்வளவு பங்களிப்பு செய்துள்ளீர்கள் என்பதை சுய பகுப்பாய்வு செய்து பார்க்க வேண்டுமென காட்டமாக கூறியிருந்தார்.

ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான வசுந்தரா ராஜே சிந்தியாவை குறிவைத்தே ஜே.பி. நட்டாவின் இந்த பேச்சு அமைந்திருந்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டன.

இந்நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் வசுந்தரா ராஜே சிந்தியா இன்று (மார்ச் 8) தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.

பாஜக மூத்த தலைவர் வசுந்தரா ராஜே சிந்தியா

உத்தரப்பிரதேச மாநிலம் ஸ்ரீ கிரிராஜ் மகாராஜ் கோயிலுக்கு யாத்திரை மேற்கொண்டுள்ள அவர், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “என் தாய் எனக்குள் ஏற்றிய அந்த ஆன்மீக தேசிய சுடர் ஒளியில் தாமரை மலர்ந்தது. அந்த விளக்கின் சுடர் ஒருபோதும் குறைந்துவிடவில்லை. அது தாமரையை ஒருபோதும் வாட விடவில்லை.

ஆன்மீகத்தையும், பாஜகவின் தேசியவாதத்தையும் என்னுடைய ஒவ்வொரு ரத்த நாளங்களும் சுமந்துச் செல்கின்றன.

தற்போது, ராஜஸ்தானை ஆளும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசானது, மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் சிதைத்துவிட்டது. அசோக் கெலாட், சச்சின் பைலட் என இரண்டு அணிகளாகப் பிளவுபட்டுள்ள அவர்களது தன்முனைப்பால் மாநிலம் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.

எனவே, ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசினை முடிவுக்கு கொண்டுவர அருள் பொழிய வேண்டுமென கிரிராஜ் மகாராஜிடம் வேண்டுதல் வைத்திருக்கிறேன்.

எனது பிறந்தநாளில் மக்கள் எனக்களித்த அன்பிற்கு நான் கடன்பட்டு இருக்கிறேன். இந்த சந்தர்ப்பத்தில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு வழி வகுத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி கூறுகிறேன். இந்த புனித கிருஷ்ண ஜன்மபூமியில் இருந்த எடுக்கப்பட்ட புனித கற்களின் உதவியுடன் ராமர் ஜென்மபூமியில் கோயில் கட்டப்படுவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது” என்றார்.

இதையும் படிங்க :லத்தியை சுழற்றி வித்தை காட்டும் 'மார்ஷியல் ஆர்ட்ஸ்' பாட்டி!

ABOUT THE AUTHOR

...view details