வாஷிங்டன்: அமெரிக்காவின் இன்டியானாபோலிஸ் நகரில் சர்வதேச விமான நிலையம் ஒன்று இயங்கிவருகிறது. இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 16) விமான நிலையத்தில் திடீர் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.