பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. பெண் குழுந்தைகளுக்குக் கூட பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்கி தரமுடியவில்லை என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தினமும், நான்கு தலித் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் எனும் அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாடுகளை பாதுகாக்கும் நோக்கில் மாட்டு அமைச்சகம் உருவாக்கப்படும் என மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சவுகான் அறிவித்துள்ளார். இது பெரும் விமர்சினத்திற்கு உள்ளாகியுள்ளது.
வரலாற்றில் முதல்முறையாக மாட்டு அமைச்சகம்! - மாடு அமைச்சகம்
போபால்: மாடுகளை பாதுகாக்கும் நோக்கில் மாட்டு அமைச்சகம் உருவாக்கப்படும் என மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சவுகான் அறிவித்துள்ளது பெரும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
கால்நடை வளர்ப்பு, வனத்துறை, பஞ்சாயத்து, கிராமப்புற வளர்ச்சி, வீடுகள் மற்றும் விவசாய நலத்துறை ஆகியவை மாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் என சிவராஜ் சவுகான் அறிவித்துள்ளார். அதன் முதல் கூட்டம், நவம்பர் 22ஆம் தேதி, மதியம் 12 மணிக்கு, அகர் மால்வாவில் அமைந்துள்ள மாடுகள் சரணாலயத்தில் நடைபெறும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே, பசுக்களின் பெயரில் சிறுபான்மை சமூகம் மீதும் தலித் சமூகம் மீதும் வன்முறை சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டுவரும் நிலையில், இது மேலும் அவற்றை ஊக்குவிக்கும் என மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.