மும்பை : சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில், உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நடந்த விவசாயிகள் மரணத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விவசாயிகள் மரணம் என்ற தலைப்பில் நாளேட்டில் தலையங்கம் ஒன்று தீட்டப்பட்டுள்ளது. அதில், லக்கிம்பூர் கேரி விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மௌமான இருப்பது ஏன் என கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி
அந்த தலையங்கத்தில், “நாட்டில் நான்கு தூண்களும் அச்சுறுத்தப்படுகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் நாட்டில் அதிகரித்துவருகின்றன. ஜனநாயகம் குறித்த கவலை எழுந்துள்ளது.
பொதுவாக பிரதமர் மக்களின் வலி மற்றும் கவலைகள் குறித்து புரிந்துகொள்வார். இதை மக்களும் பலமுறை கண்டுள்ளனர். மக்களின் வலி, வேதனைக்காக பொதுவெளியில் கூட பிரதமர் நரேந்திர மோடி கண்ணீர் வடிப்பார்.
மௌனம்
ஆகையால், இந்த விவகாரத்தில் (லக்கிம்பூர் கேரி விவசாயிகள் மரணம்) பிரதமர் நரேந்திர மோடி மௌனமாக இருப்பது ஆச்சரியமாக உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் நசுங்கி கொல்லப்பட்டுள்ளனர்.