டெல்லி: இந்தியா தலைமை தாங்கிய ஜி20 மாநாட்டிற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட உலகத் தலைவர்கள் டெல்லிக்கு நேற்றைய முன்தினம் (செப் 8) வந்தனர். இதனையடுத்து இரு நாட்கள் ஜி20 மாநாடு சிறப்பு விவாதங்கள் நிகழ்த்தப்பட்டன. முக்கியமாக, பசுமை வளர்ச்சி, காலநிலை மாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும், அடுத்த ஜி20 மாநாட்டை தலைமை தாங்கும் பிரேசில் அதிபரிடம் ஜி20 தலைமையை பிரதமர் மோடி வழங்கினார்.
முன்னதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் உடன் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இதனிடையே ஜி20 மாநாட்டின்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது மகன் சைமா வசாத் ஆகியோர் செல்பி எடுத்துக் கொண்டனர். தற்போது, இந்த செல்பி புகைப்படம் சர்வதேச அரசியலில் பேசுபொருளாக மாறி உள்ளது.
இந்த நிலையில், இது குறித்து பேசிய பங்களாதேஷ் வெளிநாட்டு அமைச்சர், “ஆம். இந்த நிகழ்வின்போது அதிபர் பைடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அவர், தனது நண்பரிடம் இருந்து மொபைலைப் பெற்றார். ஏனென்றால், அவர் புகைப்படம் எடுப்பது மிகவும் கடினம் என்பதை உணர்ந்தார். அது ஒரு விளையாட்டுத்தனமானது. இது மிகவும் நன்றாக இருந்தது. சமநிலை நன்றாக இருந்ததை நான் உணர்கிறேன். நீங்கள் அவர்கள் உடைய முகங்களைப் பாருங்கள். அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். இது ஒரு அற்புதமான நேரம் என நான் கூறுவேன்” என்று தெரிவித்தார்.
மேலும், அமெரிக்கா - பங்களாதேஷ் இடையிலான உறவை இந்த புகைப்படம் எந்த அளவு பிரதிபலிக்கிறது என்பதும், வருகிற 2024 பங்களாதேஷ் நாடாளுமன்றத் தேர்தலில் ஷேக் ஹசீனா நெருக்கடியான சூழலைச் சந்திக்க நேரிடும் என பங்களாதேஷ் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.