தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சத்ருகன் சின்ஹா திரிணாமுல் காங்கிரஸில் இணைகிறார்? - பாஜக

நடிகர் சத்ருகன் சின்ஹா காங்கிரஸில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Shatrughan Sinha likely to join TMC
Shatrughan Sinha likely to join TMC

By

Published : Jul 12, 2021, 8:14 AM IST

பாட்னா : பாஜக, காங்கிரஸ் என ஒரு ரவுண்ட் வலம்வந்த சத்ருகன் சின்ஹா அடுத்து திரிணாமுல் காங்கிரஸில் இணையலாம் எனக் கூறப்படுகிறது.

காங்கிரஸின் மூத்தத் தலைவர் சத்ருகன் சின்ஹா அக்கட்சியிலிருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்.

அதற்கு சத்ருகன் சின்ஹா பதிலளிக்க மறுத்துவிட்டார். இருப்பினும் அவர் விரைவில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

அதில், வருகிற 21ஆம் தேதி நடைபெறும் தியாகிகள் தினத்தில் சத்ருகன் சின்கா திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சத்ருகன் சின்ஹாவை மம்தா பானர்ஜி வெகுவாக பாராட்டினார். சின்ஹா 80களில் பாஜகவிற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அத்வானி உள்ளிட்டோரின் மனங்கவர்ந்த நட்சத்திர பேச்சாளராக வலம்வந்தார். இவரை பிகாரி பாபு என்றே அவர்கள் அழைந்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க :திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் யஷ்வந்த் சின்ஹா!

ABOUT THE AUTHOR

...view details