தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார் சரத் பவார் - இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார் சரத் பவார்

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் டிஸ்சார்ஜ் செய்யப்படயிருக்கிறார்.

சரத் பவார்
சரத் பவார்

By

Published : Apr 3, 2021, 6:39 PM IST

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மார்ச் 29ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள பீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பித்தப்பை கோளாறு ஏற்பட்டதன் காரணமாக, அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்ததை அடுத்து, மார்ச் 30ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்நிலையில், சரத் பவார் உடல்நிலை குறித்து மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நவாப் மாலிக் ட்வீட் செய்துள்ளார்.

அதில், 'மருத்துவர்கள் சரத் பவாரின் உடல் நிலை குறித்து பரிசோதனை செய்ததில், அவரது உடல் நிலை சீராக உள்ளது. எனவே, அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்' எனத் தெரிவித்துள்ளார்.

டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும் அடுத்த 15 நாள்களுக்கு முழு ஓய்வு எடுக்க வேண்டும் என சரத் பவாருக்கு மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கோவிட்-19 பாதிப்புக்குள்ளான பரூக் அப்துல்லா மருத்துவமனையில் அனுமதி

ABOUT THE AUTHOR

...view details