60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் இன்று முதல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு இன்று கோவிஷீல்டு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
குடும்பத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்ட சரத் பவார்! - கொரோனா தடுப்பூசி
டெல்லி: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், அவரது குடும்ப உறுப்பினர்கள் ஆகியோருக்கு இன்று கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
சரத் பவார்
மகாராஷ்டிரா அரசு பொது மருத்துவமனையில், பவார், அவரது மனைவி பிரதீபா பவார், மகள் சுப்ரியா சூலே ஆகியோர் கரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர்.
அதேபோல், இன்போசிஸ் அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர்கள் சுதா மூர்த்தி, நாராயண மூர்த்தி ஆகியோர் கர்நாடகா பொம்மசந்திராவில் கரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர்.