தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நக்சல்களின் அச்சுறுத்தல்களுக்கு முடிவு கட்டுவதில் அரசு உறுதி - அமித் ஷா

டெல்லி: நக்சல்களால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிரான போரை தர்க்க ரீதியாக முடிவுக்கு கொண்டு வர அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

அமித் ஷா
அமித் ஷா

By

Published : Apr 5, 2021, 6:13 PM IST

கடந்த 3ஆம் தேதி, சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா பகுதியில் உள்ள வனப்பகுதியில் என்கவுன்டர் நடத்தப்பட்டது. அப்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் மாவோயிஸ்டுகள் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், 23 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்ததனர்.

இந்நிலையில், சத்தீஸ்கருக்கு நிலைமையை கண்காணிப்பதற்காக சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு இன்று மரியாதை செலுத்தினார். இதுகுறித்து அவர் கூறுகையில், "ராணுவ வீரர்களின் தியாகத்தையும் துணிவையும் நாடு எப்போதும் மறவாது. அவர்களின் குடும்பத்தாருடன் ஒட்டு மொத்த நாடும் துணை நிற்கிறது.

நக்சல்களால் ஏற்பட்டுள்ள அமைதியின்மையையும் அவர்களுக்கு எதிரான போரையும் தர்க்க ரீதியாக முடிவுக்கு கொண்டு வர உறுதி பூண்டுள்ளோம்" என்றார். ஜக்தல்பூரில் உள்ள காவலர்கள் ஒருங்கிணைப்பு மையத்தில் அமித் ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

முன்னதாக, வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் உடல்களுக்கு சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் மரியாதை செலுத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details