தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'திருமண வாக்குறுதியின் பேரில் பாலுறவு'- கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு! - கேரள நீதிமன்றம்

திருமண வாக்குறுதியின் பேரின் பாலுறவு குற்றமல்ல என்று கேரள உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

sexual
sexual

By

Published : Apr 6, 2022, 9:50 PM IST

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த இளைஞர் ஒருவர் திருமணம் செய்துகொள்வதாக உறவுக்கார பெண் ஒருவரிடம் பழகியுள்ளார். இருவரும் பாலுறவு வைத்துக்கொண்டுள்ளனர். இந்த நிலையில், அந்த இளைஞருக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடைபெறவில்லை. இதனால் அந்த இளைஞர் வேறு ஒரு பெண்ணை மணந்துக்கொண்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட இளைஞரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை விசாரித்த, விசாரணை நீதிமன்றம் இளைஞருக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக தண்டனைப் பெற்ற இளைஞர் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, திருமண வாக்குறுதியின் பேரில் பாலுறவை எப்படி குற்றமாக கருதமுடியும் எனத் தீர்ப்பளித்தார்.

மேலும், விசாரணை நீதிமன்றம் வழங்கிய சிறைத் தண்டனை மற்றும் அபராதத்தையும் ரத்து செய்தார். இந்தத் தீர்ப்பு கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : மைனருடன் ஒருமித்த உடலுறவும் பாலியல் வன்புணர்வே- தெலங்கானா உயர் நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details