கர்நாடக மாநிலம், குடகு மாவட்டத்தின் கலிபீடுவில் உள்ள நவோதயா வித்யாலயா மாணவர்கள் 31 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மடிகேரி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு நாள்களாக காய்ச்சல், இருமல் உள்ள 270 மாணவர்கள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்நிலையில், அக்டோபர் 26ஆம் தேதி 21 மாணவர்களுக்கும், அக்டோபர் 27ஆம் தேதி பத்து மாணவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து மாணவர்கள் தங்குமிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பிற மாணவர்கள் பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கரோனா பரவலுக்கும், மூன்றாவது அலைக்கு எந்தத் தொடர்பும் இல்லை என மாவட்ட சுகாதார அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். மேலும் பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும், அனைத்து மாணவர்களையும் அலுவலர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:2025வரை குறைவாக சாப்பிடுங்க.. கொழுகொழு அதிபர் உத்தரவு!