நாட்டில் கோவிட் பரவல் வெகுவாக குறைந்துள்ள நிலையில், அனைத்து மாநிலங்களும் பெரும்பாலான கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன. கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு மாணவர்கள் வழக்கம் போல பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி திட்டம் நாடு முழுவதும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், குழந்தைகள் சிறார்களுக்கான தடுப்பூசிகளை தயாரிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் முனைப்பு காட்டிவருகின்றன.
இதுதொடர்பாக கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்கும் செய்யும் சீரம் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ அதர் பூனாவாலா முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். அதன்படி, மூன்று வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுவதாகவும், அடுத்த ஆறு மாதத்திற்குள் தடுப்பூசி தயாராகிவிடும் எனவும் கூறியுள்ளார்.